அடுத்தடுத்து சதம்... ரோகித், கில் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி இந்தியா!

By காமதேனு

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்ட்டில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் அடுத்தடுத்து சதமடித்துள்ளனர். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை ஏற்கெனவே வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ரோகித் சர்மா

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. முதல் நாளில் முடிவில் ரோகித் சர்மா 52 ரன்களும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல்நாள் முடிவில் 30 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார். அவர் தற்போது வரை 712 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி (655) மற்றும் ராகுல் டிராவிட் (602) ஆகியோர் உள்ளனர்.

சுப்மன் கில்

இந்நிலையில், 5வது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம், இன்று காலை 9.30 மணி முதல் நடந்து வருகிறது. போட்டி துவங்கியது முதல் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதமடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது 12வது சதமாகும். இவரைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் சதமடித்துள்ளார். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியாவின் ரன் ரேட் உயர்ந்து வருகிறது. இங்கிலாந்திம் முதல் இன்னிங்ஸில் எடுத்த 218 ரன்களை தாண்டி இந்தியா, தற்போது வலுவான ரன் ரேட்டில் இருக்கிறது. இன்னும் 3 நாள் போட்டி மீதமுள்ள நிலையில், இந்தியா வெற்றிப் பெறவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு... தேசிய மகளிர் தினத்தில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு

பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!

சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?

ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!

ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE