குல்தீப், அஸ்வினின் மாயாஜால பந்துவீச்சு... 218 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!

By காமதேனு

இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அஸ்வின் தனது 100வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும், அடுத்து 3 டெஸ்ட்களில் இந்தியாவும் வென்றுள்ளது. தற்போது இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்று விட்டது.

இறுதி டெஸ்ட்க்கான இந்திய அணியில் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டார். தேவ்தத் படிக்கல் என்பவர் இந்த டெஸ்ட் மூலம் அறிமுகமானார். முக்கியமாக, இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவும் இன்று 100-வது டெஸ்டில் விளையாடினர்.

இந்நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் இன்று காலை தொடங்கியது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கிராவ்லியும், பென் டக்கெட்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி இங்கிலாந்து அணியின் நல்ல தொடக்கத்தை அளித்தனர். 14.2 ஓவர்களில் 50 ரன்களை அடித்திருந்த இந்த ஜோடியை, குல்தீப் யாதவ் பிரித்தார். பென் டக்கெட் 27 ரன்னில் பெவிலியன் திரும்ப வைத்தார். அப்போது ஸ்கோர் 64 ஆக இருந்தது.

மற்றொரு தொடக்க வீரரான கிராவ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரியுடன் தனது 14வது அரைசதத்தை அடித்தார். அடுத்து குல்தீப் பந்தில் போப் 11 ரன்னில் அவுட்டானார். மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. கிராவ்லி 61 ரன்னில் களத்தில் இருந்தார்.

அதற்கு பிறகு இந்திய சுழற்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்காமல் 57.4 ஓவரில் 218 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரோட்டில் நடந்த திருமணம்... கிறிஸ்தவ பெயரால் இந்துப் பெண்ணின் திருமணத்திற்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு!

அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!

ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!

அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!

VIEW COMMENTS