2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி பயன்படுத்திய பேட்டின் விலை அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
தோனியின் கூலான கேப்டன் ஷிப், ஆக்ரோஷமான பேட்டிங், நோ்த்தியான தலைமை பண்பு இவை அனைத்தும் இளைஞா்களை மிகவும் ஈா்த்த விஷயமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணி கடந்த 2011ம் ஆண்டு இதே நாளில் தான், ஒருநாள் உலககோப்பையை வென்று சாதனை படைத்தது. இதே நாளில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் தோனிக்கு பத்ம விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2011ம் ஆண்டு உலககோப்பை இறுதி போட்டியில் தோனி அடித்த கடைசி சிக்சரை யாராலும் மறக்க முடியாது. அவா் சிக்சா் அடிக்க பயன்படுத்திய பேட் உலக அரங்கில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பேட்டாக சாதனை படைத்துள்ளது.
லண்டனில் 18 ஜூலை 2011ல் ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட் சேரிட்டி இரவு உணவு விருந்தில் டோனியின் இந்த வெற்றி பேட் சுமார் 1,00,000 பவுண்டுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 83 லட்சம் ரூபாய்க்கு ஆர்.கே குளோபல் ஷேர்ஸ் அண்ட் செக்யூரிட்டி நிறுவனம் பெற்றுள்ளது.
2011ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் விலையுயர்ந்த, அதாவது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் மட்டையுடன் தோனி விளையாடியுள்ளார். சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான கிரிக்கெட் மட்டைகள் ரூ.4000 முதல் ரூ.10,000 வரை இருக்கும் நிலையில், 2011 உலகக் கோப்பையின் போது தோனி பயன்படுத்திய பேட் ஏலத்தில் ரூ.83 லட்சத்துக்கு விற்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மட்டுமே விளையாடுகிறார் வருகிறார்.