சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுத்து, அவர்களை ஒவ்வொரு மாதமும் கவுரவிக்கிறது. இந்த பட்டியலில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் இடம்பெற்று அசத்தியுள்ளார்.
நடப்பாண்டு 2024-ல் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்து வரும் இந்திய இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான வில்லியம்சன் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசாங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அறிமுக ஆட்டத்தில் இருந்து தற்போது வரை அதிரடி காட்டி வரும் இந்திய இளம் வீரரான ஜெய்ஸ்வால் இனி வரும் காலங்களில் பல்வேறு சாதனைகளை புரிவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் சிறந்த வீரர்களின் பட்டியலில் இருப்பத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதே போல் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் யுஏஇ வீராங்கனைகளான கவிஷா எகொடகே, ஈஷா ஓசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.