தகர்ந்தது இந்தியாவின் கனவு… 6வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

By காமதேனு

இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி.

கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி வீரர்களில் ரோகித் சர்மாவைத்தவிர மற்ற வீரர்கள் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதனால் 240 ரன்களுக்குள் இந்தியா அணி சுருண்டது.

241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆஸ்திரேலியா, தொடக்கத்தில் சொதப்பினாலும் பின்னர் சுதாரித்து ஆடியது. அந்த அணியின் ட்ராவிஸ் ஹெட் இந்திய பந்து வீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டார். அவர் 137 ரன்னும், லபுஷேன் 58 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் அந்த அணி 43 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE