35வது பிறந்த நாளைக் கொண்டாடிய 'தல' தோனியின் மனைவி: வைரலாகும் வீடியோ!

By காமதேனு

உலகமே உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கான ஃபீவரில் இருக்கிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரது கவனமும் அகமதாபாத் மைதானத்தை நோக்கியே உள்ளது. ஆனால், இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த 'தல; தோனியோ, கூலாக உத்தராகண்ட் மாநிலத்தில் தன் பூர்வீக கிராமத்திற்கு விசிட் அடித்துள்ளார். மனைவி சாக்‌ஷி, மகள் ஷிவா ஆகியோருடன் அங்கு சென்றுள்ள அவர், நேற்று கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். மேலும், அங்குள்ள உள்ளூர் மக்களுடன் பேசி மகிழ்ந்துள்ளார்.

இந்நிலையில், இன்று 'தல' தோனியின் மனைவி சாக்‌ஷி தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். உத்தராகண்டில் தனது பூர்வீக ஊரில் நேற்று இரவு சாக்‌ஷி தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தனது மனைவிக்காக ஸ்பெஷல் கேக் வாங்கி வந்த தோனி , தனது குடும்பத்துடன் இணைந்து மனைவிக்கு பிறந்தநாள் பாடல் பாடினார்.

இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாக்‌ஷிக்கு தல தோனி ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE