ஐசிசி உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள சூழலில், கோப்பை யாருக்கு என்ற பிரபல ஜோதிடர் ஒருவரின் கணிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாளை அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா - 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா இடையே அனல் பறக்கும் ஆட்டம் குறித்தான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறிக்கிடக்கின்றன.
விளையாட்டு விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும், உலகக்கோப்பை யாருக்கு என்ற தங்களது கணிப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் சுவாரசியமான கணிப்புகளுக்கும் குறைவில்லை. அவற்றில் ஜோதிடர்களின் அனுமானங்களும் அடங்கும். ஆனபோதும், தவிப்பிலிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அவற்றையும் பொருட்படுத்தி, தங்களது கணிப்புகளுக்கு திடம் சேர்த்து வருகின்றனர்.
ஜோதிடர்களின் கணிப்புகளில் பண்டித ஜெகன்னாத் என்ற பிரசித்தி பெற்ற ஜோதிடர் ஒருவர் வழங்கிய கணிப்பு அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அவருடைய கூற்றுப்படி, இரு நாடுகளையும் ஜோதிடபூர்வமாக ஒப்பிட்டதில் இந்தியாவே உலகக்கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக ரோகித் சர்மாவின் கிரக நிலைகளை அலசி ஆராய்ந்த ஜெகன்னாத், 2011 உலகக்கோப்பையின் போது தோனிக்கு வாய்த்ததைப் போன்ற வெற்றிகர வாய்ப்புகள், ரோகித்துக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ரோகித் மட்டுமன்றி கோலி ஷ்ரேயஸ், சுப்மான் கில், ராகுல், பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களின் ஜாதகங்களையும் அலசியதில், அவை இந்தியாவுக்கு சாதகமாகவே இருப்பதாக ஜெகன்னாத் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தமாய் தேசத்தின் ஜாதகம் காரணமாக இந்திய வீரர்கள் அதீத நம்பிக்கையை தவிர்த்து பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஆட்டங்கள் தொடர்பாக இவரது கணிப்புகள் பலமுறை பலித்திருப்பதால் இம்முறையும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!
சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!
பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!
நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!