ரசிகர்கள் அதிர்ச்சி... அடுத்தடுத்து ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்!

By காமதேனு

ஆஷஸ் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர்கள் பலரும் ஓய்வு பெறப் போவதாக அடுத்தடுத்து அறிவித்து வருவது இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகத்தினரையும், கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதையடுத்து மற்றொரு வீரரான மொயீன் அலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவர்களின் அறிவிப்பை தொடர்ந்து மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான அலெக்ஸ் ஹேல்ஸூம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். 34 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 156 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஓய்வு அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் அவர், அந்த பதிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம் பிடித்திருந்தார். அப்போது நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து. அதன்பிறகு அவ்வப்போது அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் நிலையில், இங்கிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவிப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE