ஷமி நல்ல மனிதராக இருந்திருக்கலாம்... முன்னாள் மனைவி காட்டம்!

By காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுப்மன் கில் என பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் ஒரு காரணமாக இருந்தது. அதேபோல், பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். தொடரில் 4 போட்டிகளுக்கு பிறகு அணிக்கு வந்தார். அதன் பிறகு அவர் செய்தது எல்லாம் மாயாஜால வித்தை. அவர் தற்போது 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டு வீழ்த்திய பந்துவீச்சாளராக உள்ளார். ஷமியின் வருகை வலுபெற்றிருந்த இந்திய அணியை வீழ்த்த முடியாத அணி என்ற நிலைக்கு கொண்டு வந்தது.

முகமது ஷமி

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சை இந்தியா மட்டுமல்லாது உலகமே கொண்டாடி வருகிறது. ஆனால், அவரின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான், ஷமி குறித்து கசப்பான கருத்தை தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறை மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு ஷமி தனது மனைவி ஹசின் ஜஹானை பிரிந்தார்.

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது குறித்து அவரது முன்னாள் மனைவியிடம் ஊடகங்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஷமி அணிக்கு சிறந்த வீரராக இருப்பது போன்று அவர் நல்ல மனிதராக, நல்ல தந்தையாகவும் இருந்திருந்தால், என் மகளும், எனது கணவரும், நானும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தியிருக்கலாம். அது பெரும் மரியாதைக்குரிய விஷயமாக இருந்திருக்கும்'' என்றார்.

ஹசின் ஜஹான் மகளுடன்

மேலும், ஷமியின் தவறுகளாலும், பேராசையாலும், அவரது தவறான மனதாலும், நாங்கள் மூவரும் அதற்கான விலை கொடுக்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளார். அதோடு, ஷமி தனது பண பலத்தாலும், புகழ் வெளிச்சத்தாலும் அவர் மீதான எதிர்மறையான விஷயங்களை பணம் மூலம் மறைக்க முயற்சிக்கிறார் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் ஷமியின் சாதனைகள் குறித்து பேசும்போது, தனக்கு அதில் சிறப்பாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இறுதிப் போட்டியிலும் இந்தியா வெல்ல வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷமி தன்னை பாலியல் ரீதியில் சித்ரவதை செய்ததாகவும் மற்றும் குடும்ப வன்முறை செய்ததாகவும் ஹசின் ஜஹான் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, இருவருக்கும் இடையில் கடும் சட்ட போராட்டம் நடந்தது. அந்த வழக்கில், ஷமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத குடும்ப வன்முறை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம், உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு, ஷமி கொல்கத்தாவில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகி, 2018ஆம் ஆண்டில் ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE