அணியை விட்டு தூக்கிடுவாங்க... மனம் திறந்த அஸ்வின்!

By காமதேனு

இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் பாஸ்பால் அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடைபிடித்தால் ஒரு மேட்சில் இருந்து நான்கு வீரர்களையாவது தூக்கி வெளியே வீசி விடுவார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டில் இந்த மாதிரியான அணுகுமுறைகள் இந்தியாவிற்கு உகந்ததாக இருக்காது என்றும், அப்படி நடந்தால் கூட அணித் தேர்வுக்குழுவினர் வீரர்களைப் பாதுக்காக்க மாட்டார்கள் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் பாஸ்பால் முறை என்பது இங்கிலாந்துக்கு உதவும். ஆனால் அது இந்தியாவிற்கு உகந்ததாக இருக்காது எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE