கிரிக்கெட் இறுதிப் போட்டியைப் பார்க்க நீங்கள் வரவேண்டாம்: அமிதாப் பச்சனை மிரட்டும் நெட்டிசன்கள்!

By காமதேனு

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி குறித்து அமிதாப் பச்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவால் நெட்டிசன்கள் அவர் மீது அதிருப்தியடைந்துள்ளனர். அத்துடன் மிரட்டல் விடுக்கும்படியான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

மும்பையில் நவம்பர் 15-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய வீரர் விராட் கோலி தனது 50வது சதத்தை பூர்த்தி செய்து வரலாற்று சாதனை படைத்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இதில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

அமிதாப் பச்சனின் ட்விட்

இந்த நிலையில்தான் அரையிறுதியில் இந்தியா வெற்றிப் பெற்றதும் அப்போது அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ள ட்விட் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், ‘நான் பார்க்காத போதுதான் இந்திய அணி வெற்றி பெறும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சனின் பதிவுக்கு கீழே நெட்டிசன்களின் கமெண்டுகள்.

இதனால், " இறுதிப் போட்டியை அமிதாப் பச்சன் பார்க்க வேண்டாம். நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள் சார். அப்போதுதான் இந்தியா வெற்றிப் பெறும் என்றும் நெட்டிசன்கள் அமிதாப்பை மிரட்டும் வகையில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE