`நீங்கள் கடவுளின் குழந்தை'- வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் நெகிழ்ச்சிப் பதிவு!

By காமதேனு

கணவர் விராட் கோலியின் 50வது சதத்தை கொண்டாடும் விதமாக அனுஷ்கா ஷர்மா எழுதியுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இந்திய அணி 70 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கில் கலக்க, முகமது ஷமி பந்து வீச்சில் அசத்தினார்.

இதில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 50வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் அவர் 50 சதங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றதோடு, சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார். இதுநாள் வரை சச்சின் அடித்திருந்த 49 சதங்களே ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிக சதங்களாக இருந்தது. கோலிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி மூலம் தனது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா பதிவு

அதில் கடவுள் சிறந்த கதாசிரியர், உன்னுடைய காதலாக நான் வாழ அவர் அளித்த ஆசிர்வாதத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும், உன்னுடைய ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் பார்த்து வருகிறேன். இந்த விளையாட்டின் மீதுள்ள உனது நேர்மையே இந்த வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. நீதான் நிஜமான கடவுளின் குழந்தை என அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!

இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!

'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!

உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்

மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE