50வது சதம் அடித்தார் விராட் கோலி… சச்சின் சாதனை முறியடிப்பு!

By காமதேனு

ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி. இதன் மூலம் சச்சினின் முந்தைய சாதனையை முறியடித்திருக்கிறார் கோலி.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியா ஆடி 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் முதுகு பிடிப்பு காரணமாக 79 ரன் எடுத்திருந்த நிலையில், வெளியேறினார்.

விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். அவர் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே 49 சதத்துடன், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருந்தார். இந்நிலையில், இன்றைய போட்டியில் அவர் தனது 50வது சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம் அவர் சச்சினின் சாதனையை முறியடித்ததோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தனது சதத்தை நிறைவு செய்த விராட், சச்சின் முன் தலை வணங்கினார். மும்பை மைதானமே அவரது இந்த சாதனையால் அதிர்ந்தது.

மேலும், ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி இன்று படைத்தார். 2003ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதையும் அவர் இன்று கடந்துள்ளார். இதையடுத்து அணியின் ரன் ரேட்டை உயர்த்த அதிரடி காட்டிய விராட் 117 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!

'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!

என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE