சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்... புதிய சானைப் படைத்த மலேசிய வீரர்!

By காமதேனு

சீனாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் அவர் 8 ரன் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் தற்போது நடைபெறு வருகிறது. இதில் ஆசிய அணிகளுக்கு இடையிலான தகுதி சுற்றுப்போட்டியில் மலேசியா - சீனா அணிகள் மோதின.

மலேசியா - சீனா கிரிக்கெட்

மலேசியாவின் பேயுமாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சீன அணி 23 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மலேசிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சியாஸ்ருல் இட்ரஸ் 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு பந்துவீச்சாளர் டி20 போட்டியில் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட் இதுதான். இதன் மூலம் அவர் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய மலேசிய அணி 5வது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. முன்னதாக நைஜீரிய வீரர் பீட்டர் அஹோ 5 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இட்ரஸ் முறியடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE