இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மும்பையின் சாலையோர சலூனில் ஷேவ் செய்துகொண்டார். அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான தொலைக்காட்சி வர்ணனைக்காக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் இந்தியா வந்துள்ளார். இவரது கிரிக்கெட்டை விட இவரது சமூக வலைதள பதிவுகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.
இதற்காக, மும்பையில் வந்துள்ள மைக்கேல் வான், ஆர்மிஸ்டான் சாலையோரம் உள்ள சலூனில் அமர்ந்து ஷேவ் செய்துகொண்டார். அதனை படம்பிடித்த வான் திங்கட்கிழமை ஷேவிங் தினம், அதுவும் எனது நண்பர் தீன்தயாளுடன் என தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்றும் இதே கடையில் முடி வெட்டிக் கொண்டதோடு, தலைக்கு மசாஜூம் செய்துகொண்டார். இது ஒருபக்கம் சமூக வலைதளத்தில் வைரலாக, சிலர் மைக்கேல் வானை விமர்சனம் செய்தனர். அதற்கு பதிலடி தந்த அவர், எந்த ஒரு பெரிய சலூனுக்கு இணையான திறமை கொண்டவர் தீன்தயாள், பிறகு ஏன் அவரிடம் முடி வெட்டிக்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!