உண்மையான ஹீரோ நீங்கதான்... 2 கைகளையும் இழந்த கிரிக்கெட் வீரர் அமீரை சந்தித்த சச்சின்!

By சந்திரசேகர்

2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சந்தித்து பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

அமீர்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன். இவர் தனது 8 வயதில் ஒரு விபத்தில் சிக்கி, தனது 2 கைகளையும் இழந்தார். ஊனம் என்று வீட்டில் முடங்கிப் போகாமல் படிப்பு, கிரிக்கெட் இரண்டில் நேரத்தை செலவழித்தார். கல்வியில் பட்டதாரியான அவர், கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கடும் பயிற்சிகளை மேற்கொண்டார். தோள்பட்டையுடன் முகத்திற்கும் நடுவில் பேட்டிங் செய்யவும், கால்களை பயன்படுத்தி பந்து வீசவும் கற்றுக் கொண்டார்.

அதன் மூலம் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு 2013ல் ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தார். தன்னைப் போல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிக்கெட் பயிற்சிகளை அளித்து வருகிறார்.

பந்து வீச பயிற்சி

பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கும் அவர், 'நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். சச்சின் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவரைப் போலவே இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாட விரும்புகிறேன்," என்று தெரிவித்திருந்தார். இந்திய அணியில் விளையாட கனவு கண்டு வரும் அமீர் இதுவரை, டெல்லி, லக்னோ, கேரளா, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ சமீபத்தில் வைரலானபோது, அவரைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

"முடியாததை முடித்து காட்டியிருக்கிறார் அமீர். இதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் லட்சக்கணக்கான வீரர்களுக்கு ஊக்கமாக உள்ளார். ஒருநாள் அவரை சந்தித்து, அவரிடம் இருந்து ஜெர்ஸி வாங்குவேன்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சென்ற சச்சின், அமிரை சந்தித்து தனது கையெழுத்திட்ட பேட்டினை பரிசளித்துள்ளார். இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சச்சின், "அமீரைச் சந்தித்தேன். உண்மையான ஹீரோ அவர்தான். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருங்கள் அமீர்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...
பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி!

300 கிலோ எடை, ஆறரை அடி உயரம்... ஜெயலலிதா உருவத்தில் பிரம்மாண்ட கேக்!

முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து; விரைவில் அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!

திருமணம் செய்ய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திய தொழிலதிபர்: கூலிப்படையினரும் சிக்கினர்!

காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி... 4 சிறுவர்கள் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE