சத்தம் இல்லாமல் ஒரு சாதனை! விளையாட்டு வீரர்களை உருவாக்கும் மெட்ரோ நண்பர்கள் கைப்பந்து கழகம்

By காமதேனு

கடலூரில் மெட்ரோ கைப்பந்து கழகம் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளம் வீரர்களை கண்டறிந்து கடந்த 48 ஆண்டுகளாக இலவச பயிற்சி அளித்து பல்வேறு மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வருகிறது.

கடலூர் செம்மண்டலம் வரதராஜன் நகர் பூங்காவில் ’மெட்ரோ நண்பர்கள் கைப்பந்து கழகம்’ கடந்த 1975ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் செயலாளராக பொறுப்பேற்று இருந்த சிவபால சங்கர் தனது குழுவினருடன் கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.

குறிப்பாக கிராமப் பகுதிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த அமைப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

1975ம் ஆண்டு முதல் 48 ஆண்டுகளாக விளையாட்டு சேவை

இந்த அமைப்பின் மூலம் தொடர் பயிற்சி மேற்கொண்டு தமிழ்நாடு மட்டுமின்றி, தேசிய அளவிலான போட்டிகளிலும் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாதனை புரிந்துள்ளனர். இவ்வாறு சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீட்டில் அரசு பணிகளிலும் இடம் கிடைத்துள்ளது.

காவல்துறை, மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம், ரயில்வே, தேசிய வங்கிகள், உணவு பாதுகாப்பு கழகம், மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை, ரயில் பெட்டி தொழிற்சாலை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்று வாழ்வில் முன்னேறியுள்ளனர்.

இந்திய அணி

பயிற்சி மையத்தின் வீரரான குரு பிரசாத், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடி கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பெண்களையும் இந்த விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தனி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் புனித அன்னாள் பெண்கள் பள்ளி மாணவி கிருத்திக் க்ஷா என்பவர், மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணி சார்பில் ஒடிசாவில் நடைபெற உள்ள அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மாணவி கிருத்திக்‌ ஷா, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் இந்த அமைப்பின் விளையாட்டு சேவை கடந்த 48 ஆண்டுகளாக தொடர்ந்து வருவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!

300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE