இன்று நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் கலந்துகொண்டு ஓடினார். 49.09 நொடிகளில் இலக்கை அடைந்து மூன்றாம் இடத்தை பிடித்து அவர் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 2023ம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் கலந்துகொண்டு ஓடினார்.
இதில், அவர் 49.09 நொடிகளில் இலக்கை அடைந்து மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 400 மீட்டர் தடை தாண்டுதலில் 49.09 நொடிகளில் ஓடிய இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக இவர் 49.49 நொடிகளில் ஓடியதே சாதனையாக இருந்தது. இந்த போட்டியில் கத்தார் வீரர் முகமது ஹமீதியா பசீம் தங்க பதக்கத்தையும், ஜப்பானின் யுசாகு கொடோமா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். மற்றொரு இந்திய வீரரான யாஷஸ் பலக்ஷா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவர் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இந்த தொடரில் 5 தங்கம், 3 வெள்ளி உட்பட 12 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.