இன்று கடைசி டி20 போட்டி: வங்கதேசத்தை வொயிட் வாஷ் செய்யுமா இந்திய மகளிர் அணி?

By ஆர்.தமிழ் செல்வன்

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. இந்தநிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மிர்பூரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று, வங்கதேசத்தை வொயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேபோல், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று, வொயிட் வாஷை தவிர்க்கும் முனைப்புடன் வங்கதேச அணி களமிறங்க உள்ளது. டி20 தொடரைத்தொடர்ந்து ஜூலை 16-ம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE