இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தியதால் இந்திய அணி 326 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், அடுத்து வந்த சுப்மன் கில் இந்த போட்டியிலும் டக்அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் வந்த படிதார், 5 இடங்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பை துவங்கினார்.
அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 196 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 131 ரன்கள் குறித்து ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த சர்ஃப்ராஸ் கான் தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் 62 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி ஆட்டம் இழந்து வெளியேறினார். மறுமுனையில் நிலைத்த நின்று ஆடிய ரவீந்திர ஜடேஜா 212 பந்துகளை எதிர்கொண்டு, 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார்.
இன்றைய ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மார்க் வுட், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
விருப்பம்போல சாப்பிடலாம், தூங்கலாம்... வேலையும் பார்க்கலாம்; ஹைதராபாத்தில் ஜாலி ஆபீஸ்!
பிரதமர் மோடியை பதவி விலக வேண்டும்... பகீர் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!
வித்தவுட்டில் பயணம்... ரூ.100 கோடி அபராதம் தீட்டிய மும்பை ரயில்வே கோட்டம்!
லிவிங் டு கெதரில் மாணவி... கல்லூரி விடுதியில் குழந்தையைப் பெற்றதால் அதிர்ச்சி!
கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்