குன்னூர்: பள்ளி மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி அணி அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழி பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குன்னூர், கோத்தகிரி, உதகை, கொடைக்கானல் பள்ளிகளில் இருந்து 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் நீலகிரி மற்றும் கொடைக்கானலில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகளின் தொடக்கமாக புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அலெக்ஸ் ராணி, தாளாளர் மரிய கொரட்டி, புனித ஜோசப் ஐசிஎஸ்சி பள்ளி முதல்வர் செல்வராணி ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேன்ஸ் பள்ளி, கொடைக்கானல் இன்டர்நேஷனல் பள்ளி, ரிவர் சைடு பள்ளி, ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி, இன்டர்நேஷனல் கம்யூனிட்டி பள்ளி, சத்யகாந்தி பள்ளி, கே பி எஸ் பள்ளி, ஹோலி இன்னசென்ட் பள்ளி என 9 பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
» வங்கதேச வன்முறை: பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு!
» 2025-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்: 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது
முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணிகள் கால் இறுதி போட்டியிலும், தொடர்ந்து அரை இறுதிப் போட்டியிலும் பங்கேற்றனர். இறுதிச்சுற்றில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் புனித ஜூட்ஸ் பள்ளி அணியினர் அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்றனர்.
போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும், சுழற் கோப்பையும், சிறந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவின் ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.