இலங்கை அணியை இந்தியா வீழ்த்திய காரணத்தால், உலகக்கோப்பை அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி.
நேற்றைய போட்டியில் இந்திய அணி, இலங்கையை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கும் நிலையில், இலங்கை அணி கிட்டத்தட்ட தன் அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. இந்தப் போட்டிக்கு முன்பாக அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் பாகிஸ்தான் அணிக்கு போட்டியாக நான்கு அணிகள் இருந்த நிலையில், தற்போது இலங்கை அணி அந்தப் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது.
தற்போது உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் இந்தியா 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் தங்களின் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் உள்ளன. இதில் ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
தற்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே இரண்டு அரை இறுதி இடங்களுக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கு இணையான வாய்ப்பு இருந்தாலும் அந்த அணி இன்னும் இந்திய அணியை சந்திக்கவில்லை. இந்தியா தற்போது இருக்கும் ஃபார்மில் நெதர்லாந்து அணியை நிச்சயம் வீழ்த்தி விடும் என கணக்கிட்டால் அந்த அணியால் அரை இறுதி செல்வது கடினம்.
பாகிஸ்தான் அணி தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி ஆகி விடும். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி தனது மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறாமல் இருக்க வேண்டும்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!
திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!
சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!
இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!
குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!