இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தனது பெயரை கழுதைக்கு வைத்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேமியன் மார்டின் கலந்துரையாடலின் போது கூறினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ரிக்கி பான்டிங் தலைமையிலான காலகட்டத்தில், கிரிக்கெட் உலகில் தோற்கடிக்க முடியாத அணியாக விளங்கியது. தொடர்ந்து 2 உலகக் கோப்பை பட்டம், 2 சாம்பியன்ஸ் கோப்பை பட்டம் என பல சாதனைகளையும் படைத்தது. அதேநேரம், ரிக்கி பான்டிங் தலைமையிலான அணிதான் அன்றைய காலகட்டத்தில் மிகவும் திமிர் பிடித்த அணியாகவும் இருந்தது என்று கூறப்படுக்கிறது.
அப்படியான ஒரு சம்பவம் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு கோப்பை வழங்கும் நிகழ்வின் போது, ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த டேமியன் மார்டின், அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த சரத் பவாரை கையால் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சமீபத்தில் அஸ்திரேலிய வீரர்கள், ஆடம் கில்கிறிஸ்ட், பிராட் ஹாக் உள்ளிட்டோர் இணையம் மூலம் கலந்துரையாடினர். அப்போது, கில்கிறிஸ்ட் 2006ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் நடைபெற்ற சம்பவம் பற்றி நினைவூட்டினார். அதுகுறித்து மனம் திறந்த மார்டின், அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவார் தொடரில் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டனிடம் கோப்பையை வழங்கினார். அவர் அணியுடன் இணைந்து புகைப்பட எடுக்க விரும்பியதாகவும், ஆனால் அன்று மேடை சிறியதாக இருந்ததால் வீரர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தனர். அப்போது அவரை தான் கையால் லேசாக தள்ளிவிட்டேன் என்றார். இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் இந்திய ரசிகர்களை மிகவும் ஆத்திரப்படுத்தியதால், தனது உருவப்படத்தை எரித்ததாகவும், கழுதைக்கு தனது பெயரை சூட்டியதாகவும் தெரிவித்தார். இறுதியாக, அந்த கழுதை அன்றுடன் உயிருடன் இருந்திருக்குமா என்பது சந்தேகம் என கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!