ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சாதனை... நம்பர் 1 இடத்தை பிடித்தார் பும்ரா!

By காமதேனு

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சில மாற்றங்களை செய்துள்ளது. மேற்கு இந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. அதேபோல், இந்தியா - இங்கிலாந்து, நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வீரர்கள் மற்றும் அணிகளின் வெற்றி தோல்விக்கு ஏற்ப, தரவரிசைப்பட்டியல் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா

இன்று மாற்றி வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 1979-80ம் ஆண்டுகளில் கபில்தேவ் 2ம் இடம் பிடித்திருந்ததே சாதனையாக இருந்து. அதேபோல், ஜகீர் கான் 2010ம் ஆண்டு 3ம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அசத்தியிருந்தார். இதன் மூலம் அவர் 3வது இடத்தில் இருந்து, முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

ஜஸ்பிரித் பும்ரா

அஸ்வின் இரண்டு இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு 3வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவும், 4வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், 5வது இடத்தில் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர் தரவரிசைப்பட்டியலில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 7வது இடத்தில் உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE