ஒரே ஓவரில் 39 ரன்கள்: டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனைப் படைத்தார் டேரியஸ் விசர்

By KU BUREAU

அபியா: டி20 கிரிக்கெட் போட்டியில் சமாவோ வீரர் டேரியஸ் விசர் ஒரே ஓவரில் டேரியஸ் விசர் 6 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆடவருக்கான ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்று போட்டி சமாவோ நாட்டின் தலைநகரான அபியாவில் நடைபெற்றது. இதில் சமாவோ - வனுவாட்டு அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த சமாவோ அணி 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் சமோவா அணியின் பேட்ஸ்மேனான டேரியஸ் விசர் 62 பந்துகளில், 14 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி 20-ல் சதம் விளாசிய முதல் சமாவோ வீரர் என்ற சாதனையை படைத்தார்.

போட்டியின் 15-வது ஓவரில், டேரியஸ் விசர் அடுத்தடுத்து விளாசிய 6 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்தார். இதில் 3 நோ-பால்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டி உட்பட அனைத்து வகையான போட்டிகளிலும் ஒரே ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன்களாக பதிவானதன் மூலமாக வரலாற்று சாதனையை படைத்தார் டேரியஸ் விசர்.

முன்னதாக இந்தியாவின் ரவி சாஸ்திரி (1968-ம் ஆண்டு) யுவராஜ் சிங் (2007-ம் ஆண்டு), மேற்கு இந்தியத் தீவுகளின் கெய்ரன் பொலார்டு (2021), நிகோலஸ் பூரன் (2024), நேபாளத்தின் தீபேந்திர சிங் ஐரீ, இந்தியாவின் ரோஹித் சர்மா - ரிங்கு சிங் (2024) ஆகியோர் மட்டுமே ஓரே ஓவரில் 36 ரன்களை விளாசியிருந்தனர். இந்த சாதனையை தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார் சமாவோ வீரர் டேரியஸ் விசர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE