பாகிஸ்தான் வீரர்களுக்கு சம்பள பாக்கி... வெளியானது அதிர்ச்சி தகவல்!

By காமதேனு

இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் நான்கில் தோற்று, இரண்டில் மட்டுமெ வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுடனான போட்டிகளில் அந்த அணி முழுமையாக தோற்றது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீது பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வீரர் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் “வீரர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை, வாரியத் தலைவர் கேப்டனுக்கு பதிலளிக்கவில்லை, இந்த சூழ்நிலையில் நாங்கள் அணியிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை பரிசீலனை செய்யும் முடிவில் இருப்பதாக சில வீரர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE