இந்திய அணியுடனான டி20 தொடர்… ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

By காமதேனு

உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்ததும், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேத்யூவ் வேட் தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர்களான வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஜாம்பா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி விவரம்: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹண்ட்டார்ப், சீன் அப்போட், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், ஸ்பென்சன் ஜான்சன், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

இத்தொடரின் போட்டிக்கான அட்டவணை

முதல் டி20 - நவம்பர் 23 - விசாகப்பட்டினம்

2வது டி20 - நவம்பர் 26 - திருவனந்தபுரம்

3வது டி20 - நவம்பர் 28 - கவுகாத்தி

4வது டி20 - டிசம்பர் 1 - நாக்பூர்

5வது டி20 - டிசம்பர் 3 - ஹைதராபாத்

இதையும் வாசிக்கலாமே...

இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?

வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!

அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!

தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!

கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE