நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற ஆஸ்திரேலியா 389 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தரமசாலாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மாணித்தது. இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை மிரட்டி எடுத்தனர். வார்னர் 81 ரன்னும், ஹெட் 109 ரன்னும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 49.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 388 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
389 ரன் என்ற கடினமாக இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இரு அணிகளுக்குமே அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?
வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!
தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!
கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!