வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

By காமதேனு

சீனாவின் ஹாங்சோவில் 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. கடந்த 22ம் தேதி தொடங்கிய இந்த போட்டித் தொடர் நாளை 28ம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.

இந்த நிலையில் இன்று நடந்த பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆலிம் நூரை வீழ்த்தி 144-142 என்ற ஸ்கோர் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதே போன்று பெண்கள் கலப்பு காம்பவுண்ட் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கலப்பு காம்பவுண்ட் பிரிவில் ராகேஷ் குமார் மற்றும் ஷீத்தல் தேவி தங்கம் வென்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக ஷீத்தல் தேவி 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று 3 பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!

இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE