156 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து... சாம்பியனை அலறவிட்டது இலங்கை!

By காமதேனு

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 156 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ, தாவீத் மலான் ஆகியோர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேர்ஸ்டோ 30 ரன்னுக்கும், மலான் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி இன்று பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டது. இதனால் அடுத்தடுத்து களத்திற்கு வந்த ஜோ ரூட், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மொயின் அலி 15 ரன்களிலும், வோக்ஸ் 0 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால், இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE