இலங்கைக்கு எதிரான போட்டி - டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

By காமதேனு

இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 25வது லீக் போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் தோற்கும் அணி லீக் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும் என்பதால், இரு அணி வீரர்களுமே வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறது. அந்த அணி முழு உத்வேகத்துடன் ஆடினால் மட்டுமே இன்றைய போட்டியில் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அதே நேரம் இலங்கை பேட்டிங் வரிசை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால், பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்டு வருகிறது. இரு அணிகளும் தங்கள் பலம், பலவீனம் அறிந்து விளையாடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3ல் தோல்வியும், 1 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் இலங்கை 7வது இடத்திலும், இங்கிலாந்து 8வது இடத்திலும் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE