இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் ரன் குவித்தால் முதலிடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது.
ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 829 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சுப்மன் கில் 823 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். பாபருக்கும், கில்லுக்கும் இடையில் 6 புள்ளிகளே வித்தியாம் உள்ளது. கில் இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. அதே நேரம் விளையாடிய 3 போட்டிகளில் 95 ரன்கள் எடுத்துள்ளார். பாபர் உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 157 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பார்.
தென்னாப்பிரிக்க வீரர் குவின்டன் டிகாக் 769 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஹென்ரிச் கிளாசன் 756 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் 747 புள்ளிகளுடன் 5 மற்றும் 6ம் இடத்தில் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!