ஆசிய பாரா விளையாட்டு... ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்தது இந்தியா!

By காமதேனு

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளது. ஆண்டவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுமித் அன்டில் 73.29 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்து அசத்தி தங்கம் வென்றதோடு புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

மற்றொரு இந்தியர் புஷ்பேந்திர சிங் 62.06 தூரம் வீசி மூன்றாம் இடத்தை பிடித்தார். இதனால் ஒரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம் கிடைத்துள்ளது. இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE