வங்கதேசத்திற்கு எதிரான போட்டி- டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

By காமதேனு

வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. உலகக் கோப்பை தொடரில் இதுவரை 3 முறை முதலில் பேட்டிங் செய்துள்ள அந்த அணி 300 ரன்களுக்கு குறையாமல் எடுத்துள்ளது. அதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எடுத்த 311 என்பதே குறைந்தபட்ச ரன்னாக உள்ளது.

இதனால், இந்த போட்டியிலும் அந்த அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டக்கூடும் என்பதால் 400 ரன்களை எட்டவும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம், நெதர்லாந்திடம் தோல்வியை தழுவிய அந்த அணி, வங்கதேசத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள வங்கதேச அணி, இனி வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றியை பெற்று, தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் முனைப்புடன் களமிறங்குகிறது.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE