இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்

By காமதேனு

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சின் அடித்தளத்தை கட்டமைத்த முன்னாள் கேப்டன் பிஷன் கிங் பேடி காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி இன்று (அக்.23) காலமானார். அவருக்கு வயது 77. இவர் இந்திய அணிக்காக 1967 முதல் 1979ம் ஆண்டு வரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் எரப்பள்ளி பிரசன்னா, பி.எஸ் சந்திரசேகர், எஸ்.வெங்கடராகவன், பிஷன் சிங் பேடி அடங்கிய நால்வரின் சுழல் கூட்டணி உலக அளவில் பேசப்பட்டது.

பிஷன் சிங் பேடி மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE