டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து - தடுமாறும் தென்னாப்பிரிக்கா!

By காமதேனு

இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

உலகக் கோப்பை தொடரின் 20வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கி பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர், டாப்லே வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, அந்த அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. ஒருகட்டத்தில் அந்த அணி 4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 12 ரன் எடுத்திருந்தது.

இந்த போட்டியில் தோற்றால் அரையிறுதி வாய்ப்புக்காக போராடும் நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும். அதன் காரணமாக அந்த அணி வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தி வெற்றிக்காக விளையாடி வருகிறார்கள். கத்துக்குட்டி நெதர்லாந்துடனான போட்டியில் தோல்விடைந்த தென்னாப்பிரிக்கா, இந்த போட்டியில் தடுமாற்றுடத்துடன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE