நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்- பிசிசிஐ அறிவிப்பு!

By காமதேனு

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 22ம் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

ஆல்ரவுண்டரான ஹர்திக், இந்திய அணியின் பலம் என்பதால், தொடரின் முக்கிய கட்டத்தில் விளையாடுவது அவசியம். அதனால், அவருக்கு சில நாட்கள் ஓய்வளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் ஓய்வில் உள்ளார். இதன் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை, 22ம் தேதி நடைபெற உள்ள நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியுடன் ஹர்திக் பாண்டியா இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!

நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!

லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE