இந்தியா - வங்கதேசத்திற்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி இன்று புனேயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாட இரு அணிகளும் தயாராக உள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போனவர். இந்திய அணிக்காக அவர் இதுவரை 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1,933 ரன் எடுத்துள்ளார். இன்னும் 67 ரன் எடுத்தால் அவர் ஒருநாள் போட்டிகளில் 2,000 ரன்களை கடப்பார்.
வங்கதேசத்துடனான இன்றைய போட்டியில் அவர் 67 ரன் எடுத்தால் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா 40 ஆட்டங்களில் 2,000 ரன்களை கடந்ததே சாதனையாக உள்ளது. டெங்கு பாதிப்பு காரணமாக முதல் இரண்டு போட்டியில் விளையாடாதா கில், அதில் இருந்து மீண்டு பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடி 16 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதனால், இன்றைய போட்டியில் அவர் ரன் அடித்து தனது திறமையை நீரூபித்து, புதிய சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.