ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் ஜோகோவிச்,சபலங்கா!

By காமதேனு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஜோகோவிச், சபலங்கா ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்பர்ன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் நான்கு சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் கால்இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நோவா ஜோகோவிச் - டெல்யர் ஃப்ரிட்ஸ்

ஆடவர் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில், உலகின் நம்பர் 1 வீரரும், செர்பியாவைச் சேர்ந்தவருமான நோவா ஜோகோவிச் - அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்-ஐ எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் சுற்றை 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

ஆனால், அடுத்த செட்டில் ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி கொடுத்த ஃபிரிட்ஸ் 6-4 எனக் கைப்பற்றினார். இதையடுத்து, சுதாரித்த ஜோகோவிச் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-2, 6-3 என அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் 3-1 என்ற செட் கணக்கில் அவர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

கிரெஜிக்கோவா, சபலங்கா

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது கால்இறுதி ஆட்டத்தில் பெலாரஸின் ஆர்யனா சபலங்கா - செக் குடியரசின் பார்போரா கிரெஜிக்கோவாவை எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலங்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

இதையும் வாசிக்கலாமே...


வசீகரிக்கும் வீடியோ... ஏஐ தொழில்நுட்பத்தில் கண் சிமிட்டி, புன்னகைக்கும் அயோத்தி ராமர்!

பெண்களுக்கு சினிமா ஆசைகாட்டி மோசம்... ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் கைது!

எலும்பு முறிவு; படுத்த படுக்கையான அருண்விஜய்... வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

உஷார்... டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 3 வயது குழந்தை பலியான சோகம்!

அதிகளவில் மது; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேக்ஸ்வெல்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE