உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வதம் செய்யுமா இந்தியா?

By காமதேனு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, வங்களாதேச அணிகளின் வீரர்கள்.

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவுடன், வங்கதேசம் அணி இன்று மோதுகிறது. புணேவில் நடைபெறும் இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியா-வங்கதேச அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 40 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், இந்தியா 31 முறையும், வங்கதேசம் 8 முறையும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் 3 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் அணி, ஒரு போட்டியில் மட்டும் வென்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் வெற்றிக் கணக்கை தொடரும் முனைப்பில் இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE