ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் அமெரிக்காவின் கோகோ கவுப்
உலக அளவில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் முக்கியமானதாகவும், கெளரவமானதாகவும் கருதப்படுவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள். ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபன் தொடர்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் தொடர் மெல்பர்ன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நான்கு சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று கால்இறுதி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது.
இன்று காலை முதல் போட்டியாக மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கோகோ கவுப் - உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுகுடன் பலப்பரீட்சை நடத்தினார். இரு வீராங்கனைகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் சுற்றில் இருந்தே போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.
முதல் செட்டை கவுப் 7-6 என போராடிக் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றை மார்டா 7-6 என கைப்பற்றினார். இதனால், போட்டியின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் டிசைடர் சுற்றுக்குப் போட்டி நகர்ந்தது. ஆனால், இந்த சுற்றில் சுதாரித்து ஆடிய கவுப் அசத்தலாக விளையாடி 6-2 என கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதையும் வாசிக்கலாமே...
ராமர் கோயிலில் இன்று முதல் தரிசனம்... கட்டுக்கடங்காத கூட்டம்; ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்!
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்... இன்று கூடுகிறது அமைச்சரவை... என்னென்ன முக்கிய முடிவுகள்?
நவீன நீர்வழித் திட்டத்தின் நாயகன்... காலமானார் ஏ.சி.காமராஜ்
விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; சிக்கிய சார்பதிவாளர்... கோவையில் பரபரப்பு!