துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி: ஷுப்மன் கில், அபிமன்யு, ருதுராஜ், ஸ்ரேயஸ் கேப்டன்களாக நியமனம்

By KU BUREAU

மும்பை: உள்நாட்டு சீசனில் சிவப்பு பந்து கிரிக்கெட்டின் தொடக்கத்தைக் குறிக்கும் துலீப் டிராபி போட்டியின் முதல் சுற்று வரும் செப்டம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் அனந்தபூரிலும், பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 4 அணிகளை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் இளம் வீரர்களான ஷுப்மன்கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த்,டி 20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் டேல் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஞ்சி கோப்பை தொடரை புறக்கணித்ததால் பிசிசிஐ-யின் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷன்மற்றும் இங்கிலாந்து தொடரில் முக்கியபங்குவகித்த சர்பராஸ் கான், துருவ்ஜூரெல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் சீனியர் வீரர்களானரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டோர் சேர்க்கப்படவில்லை.

இந்த 4 அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள், வங்கதேச அணிக்கு எதிரானதொடருக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் விடுவிக்கப்படவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ அணிக்கு கேப்டனாக ஷுப்மன் கில், ‘பி’ அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன், ‘சி’ அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், ‘டி’ அணிக்கு கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE