உலகக் கோப்பை கிரிக்கெட் - சதத்தை தவறவிட்ட ரோகித் ஷர்மா!

By காமதேனு

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ரோகித் ஷர்மா 86 ரன்னுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களை திணறடித்த இந்திய பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை 191 ரன்னுக்கு சுருட்டினர். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால், கேப்டன் ரோகித் ஷர்மா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகள் அனைத்தையும் நாலாபுறமும் சிதறடித்தார். 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் விளாசிய அவர் 86 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம அவர் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால், இந்த போட்டியில் 6 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் 303 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE