உலகக் கோப்பை கிரிக்கெட்; இந்தியாவிடம் 191 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்!

By காமதேனு

உலகக் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாப்பாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா

155 ரன்கள் எடுக்கும் வரை 2 விக்கெட்களை மட்டுமே இழந்து அந்த அணி வலுவான நிலையில் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால், அரை சதம் கடந்த நிலையில் முகமது சிராஜ் பந்து வீச்சில் பாபர் அசாம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து வெளியேறினர். அதாவது 36 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் அந்த அணி 42.4 ஓவர் முடிவில் 191 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்னும், முகமது ரிஸ்வான் 49 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குரூப் தேர்வு தாமதம்... இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்! குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்! ‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு! இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பிரபல நகைச்சுவை நடிகர் கைது! பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE