இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டி துவங்கியுள்ள நிலையில், இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதுநாள் வரை உலகக் கோப்பை தொடருக்கான பரபரப்பு குறைவாகவே இருந்த நிலையில், இன்று முதல் முறையாக தொடருக்கான பரபரப்பு பற்றியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 7 முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளன. இதில், கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் ரோகித் ஷர்மா 140 ரன் அடித்தார். இதுவே இருதரப்பில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்னாக உள்ளது. விராட் கோலி 107 ரன்னும், சச்சின் டெண்டுல்கர் 98 ரன்னும் அடித்துள்ளனர். பாகிஸ்தான் சார்பில் சயீத் அன்வர் 101 ரன்கள் அடித்ததே அதிபட்ச ரன்னாக உள்ளது. கடந்த தொடர்களை போலவே ரோகித்தும், விராட் கோலியும் அபாரமாக விளையடி இன்றும் ரன் குவிப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...