உலகக் கோப்பை கிரிக்கெட்... இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் மழையின் ஆட்டம் இருக்குமா?

By காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல கோடி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்கும் என்று கணித்தாலும், சுழற்பந்து வீச்சுக்கு எப்போதும் சாதகமானதாகவே இருக்கும் என்பதால் நாளைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு குறையிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி மைதானம்

இந்நிலையில், நாளை அகமதாபாத்தில் மழை பெய்து ஆட்டம் பாதிக்குமா என்பதே ரசிகர்களின் தற்போதைய ஒரே கவலையாக உள்ளது. ஆனால், அனைவரும் மகிழும்படியான செய்தியை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் நாளை அகமதாபாத் நகரில் மழை பெய்வதற்கான சாத்தியம் பூஜ்ஜியம் சதவீதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் பகல்நேர வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி வரை இருக்கும். மாலையில் அது 26 டிகிரி வரை குறையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளைய போட்டி ரசிகர்களுக்கு முழு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற நிலையில், நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று அந்த சாதனையை இந்தியா தக்க வைக்குமா அல்லது இதுநாள் வரையிலான தோல்வியில் இருந்து பாகிஸ்தான் மீளுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டுள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் உலகக் கோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE