அகமதாபாத்துக்கு படையெடுப்பு... தங்க இடமில்லாமல் தவிப்பு; கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

By காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ள நிலையில், டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. இந்த போட்டியை முன்னிட்டு சிறப்பு விமான சேவை, சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.

நரேந்திர மோடி மைதானம்

இரு அணிகளுக்கு இடையிலான போட்டியை காண ரசிகர்கள் அகமதாபாத்தில் நேற்றில் இருந்தே குவிந்து வருகின்றனர். இதனால், அந்நகரில் உள்ள அனைத்து ஹோட்டல் அறைகளும் நிரம்பி வழிகின்றன. தங்குவதற்கான கட்டணங்களும் சுமார் 20 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓட்டல் அறைகளில் இடம் இல்லாததாலும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் மலிவான விலையில் தங்கும் வகையில் ரசிகர்களில் சிலர் இதனை புத்திசாலித்தனமாக கண்டறிந்து செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அகமதாபாத் மருத்துவ சங்க தலைவர் துஷார் படேல் கூறும்போது, இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனைகளில் உடல் பரிசோதனை என்ற பெயரில் தங்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க! நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மாணவர்கள் அதிர்ச்சி... இந்த வருடம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது - இன்ஃபோசிஸ் அறிவிப்பு! முன்பதிவு தொடங்கியது... சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம்! அடுத்தடுத்து துயரம்... குழந்தை உயிரிழப்பு; மனைவி தற்கொலை- வேதனையில் உயிரை மாய்த்த கணவர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE