வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து - வங்கதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணியும் அதற்கு ஏற்றவாறு தயாராகியுள்ளன.
இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெல்வதன் மூலம், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதோடு, வலுவான இடத்தையும் பிடிக்கும் முனைப்புடன் அந்த அணி களமிறங்கியுள்ளது.
வங்கதேசம் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தானுடன் வெற்றியும், இங்கிலாந்துடன் தோல்வியையும் தழுவியுள்ளது. இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...