மாநில போட்டிக்கு தேர்வாக திறமைகளை வெளிப்படுத்திய கடலூர் வீரர், வீராங்கனைகள்

By காமதேனு

கடலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 1,524 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மாவட்டம் விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் துவக்கி வைத்தனர். வயதை அடிப்படையாகக் கொண்டு 14, 17, 19 என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர், 3000 மீட்டர் உள்ளிட்ட ஓட்டப்பந்தயங்கள், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 1,524 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.

கடலூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்

இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள், காஞ்சிபுரத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். முன்னதாக இதேபோன்று மாணவிகளுக்கான தடகள போட்டிகளும் நடைபெற்றது. குழு விளையாட்டு போட்டிகள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் நிலையில், இதில் வெற்றி பெறுபவர்களும் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த குழுவினர் செய்திருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE