பாரிஸ்: ஒலிம்பிக் போட்டி மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் , ஹங்கேரியின் பெர்னாடெட் நாகியை எதிர்கொண்டார். அபார ஆட்டத்தின் மூலம் ஹங்கேரி வீராங்கனையை ரீத்திகா ஹூடா 12 - 2 புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார்.
இதனையடுத்து இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா, கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரி கைஸியுடன் நடைபெற்ற காலிறுதிப் போட்டியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார். அதே நேரம் ஏற்கனவே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றதால் ஐபெரி கைஸி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஆனாலும், ரீத்திகா ஹூடாவுக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ஐபெரி கைசி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், ரீத்திகா ஹூடா ரீபிசேஜ் சுற்றில் போட்டியிட இன்னும் வாய்ப்பு உள்ளது,
» வயநாடு நிலச்சரிவு: ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!
» இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: நிலச்சரிவால் 128 சாலைகள் மூடல்; 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு